இந்த குட்டி பையனா கேஜிஎஃப் எடிட்டர்? ஷாக் கொடுத்த படக்குழு
கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாக உள்ள நிலையில் அந்த படத்தின் எடிட்டர் குறித்த தகவல் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது.

கன்னட நடிகர் யஷ் நடித்து பிரசாந்த் நீல் இயக்கி 2018ல் வெளியான படம் கேஜிஎஃப். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நாளை வெளியாக உள்ள கேஜிஎஃப் 2ம் பாகத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தின் எடிட்டர் ஒரு 19 வயது சிறுவன் என கூறி ஷாக்கை கிளப்பியுள்ளது படக்குழு. 19 வயதான உஜ்வால் குல்கர்னி சில குறும்படங்களை எடிட் செய்துள்ளதுடன், வேறு சில படங்களுக்கும் ரசிக எடிட்டிங் செய்து வந்துள்ளார்.
கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு அவ்வாறு இவர் செய்திருந்த எடிட்டிங் இயக்குனர் பிரசாந்த் நீலின் மனைவிக்கு பிடித்துபோக, இந்த சிறுவனை அழைத்து அறிமுகப்படுத்தினாராம்.
பிரசாந்த் நீலுடன் 4 மாத காலம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டு இரண்டாம் பாகத்தை முழுவதும் தன் மேற்பார்வையிலேயே எடிட் செய்து தயார் செய்துள்ளார் இந்த சிறுவன்.
நீங்களாவது காப்பாத்துங்க ராக்கி பாய்! எதிர்பார்ப்பில் கேஜிஎஃப் 2!