Tamil Cinema News
கிச்சா சுதீப் செய்த சம்பவம்.. லோகேஷ் கனகராஜ்க்கு வந்த பிரச்சனை..!
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களை இயக்குவதில் பெயர் போன இயக்குனராக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார்.
தொடர்ந்து தமிழில் தோல்வியே காணாத ஒரு இயக்குனராகவும் லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். முன்பெல்லாம் ஒரு இயக்குனர் திரையுலகத்திற்கு வந்தார் என்றால் அவர் தனக்கென தனி இடத்தை பிடித்து பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கு நிறைய காலங்கள் தேவைப்படும்.
ஆனால் இப்பொழுது அதற்கு லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய உதாரணம் என்று கூறலாம். தனது மூன்றாவது திரைப்படத்தை பெரிய நடிகரை வைத்து இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.
அப்படியாக விஜய்யை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு லியோ திரைப்படத்தை இயக்குனர் இப்பொழுது நடிகர் ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் வகையிலான ஒரு ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் கிச்சா சுதீப். மேக்ஸ் என்கிற அந்த திரைப்படம் தற்சமயம் தமிழில் வெளியாகி அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட கைதி போலவே கதை அமைப்பை கொண்ட ஒரு திரைப்படம் தான் மேக்ஸ். மேக்ஸ் திரைப்படத்தின் கதைப்படி ஒருநாள் இரவில் நடக்கும் ஒரு கதையாக இது இருக்கிறது இதனை பார்க்கும் பலரும் லோகேஷ் கனகராஜ் கைதி 2 திரைப்படத்தை இதைவிட சிறப்பாக எடுப்பது கடினம் தான் என்று கூறி வருகின்றனர் அந்த அளவிற்கு வரவேற்பை பெற்று இருக்கிறது மேக்ஸ் திரைப்படம்.