Cinema History
நான் வர்றதுக்குள்ள நீங்கள் எப்படி அதை செய்தீர்கள்!.. இளையராஜா இசைக்கு பாட மறுத்த கே.ஜே ஜேசுதாஸ்!..
Ilayaraja Jesudass: இளையராஜா ஒரு இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி பாடல்கள் பாடுவதில் சிறப்பான புலமை பெற்றவர் இளையராஜா எனக் கூறலாம். ஆரம்பத்தில் இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இளையராஜா சில சமயங்களில் ஏதாவது ஒரு பாடல்களை பாடகர்கள் வராத பொழுது பாடி பார்ப்பது உண்டு
அப்படி அவர் பாடிய சில பாடல்கள் நல்லப்படியாக இருந்ததால் அவை சினிமாவிலும் அப்படியே வந்தன. அதன் பிறகு இளையராஜாவின் குரலுக்கு ஒரு மதிப்பு வந்தது. இளையராஜா தங்களது திரைப்படங்களில் முதல் பாடலை பாடினால் அது அந்த படத்திற்கு வெற்றியை கொடுக்கும் என்று பல இயக்குனர்கள் நம்பினார்கள்.
கங்கை அமரன் தான் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படத்தில் கூட பாட்டாலே புத்தி சொன்னான் என்று ஒரு பாடலை வைத்திருப்பார். அந்த பாடல் இளையராஜா பாடிய பாடலாகும் இப்படி முதல் பாடல்கள் இளையராஜா பாட வேண்டும் என்கிற அளவிற்கு அவரது குரலுக்கு மதிப்பு வந்தது.

இருந்தாலும் கூட என்றுமே பாடகர்களை குறைத்து பேசியது கிடையாது இளையராஜா. இந்த நிலையில் கே ஜே ஜேசுதாஸ் பாடவிருந்த ஒரு பாடலுக்கான இசையை இளையராஜா ஏற்கனவே இசையமைத்து வைத்திருந்தார்.
கிட்டத்தட்ட அது பக்தி பாடல் மாதிரியான ஒரு பாடல் என்பதால் கே ஜே ஜேசுதாஸ் பாடினால்தான் சரியாக இருக்கும் என்கிற நிலை இருந்தது ஏனெனில் கே ஜே ஜேசுதாஸ் பக்தி பாடல்களை சிறப்பாக பாடக்கூடியவர். ஆனால் அவர் வருவதற்கு மிகவும் தாமதமானதால் இளையராஜாவே அந்த பாடலை முழுதாக பாடினார்.
பிறகு கே ஜே ஜேசுதாஸ் வந்ததும் அவரை பாட சொன்னார் இளையராஜா. ஆனால் அதற்கு முன்பே இளையராஜாவே முழுமையாக அந்த பாடலை பாடிவிட்டதை அறிந்த கே ஜே ஜேசுதாஸ் முதலில் அந்த பாடலை போட்டு காட்டுங்கள் அப்போதுதான் நான் பாடுவேன் என்று கூறிவிட்டார் கே ஜே ஜேசுதாஸ்.
சரி என்று இளையராஜாவும் அந்த பாடலை போட்டு காட்டினார் அதைக் கேட்ட கே ஜே ஜேசுதாஸ் இவ்வளவு அற்புதமாக இந்த பாடலை என்னால் கூட பாட முடியாது அதனால் இந்த பாடலை நான் பாட மாட்டேன் நீங்கள் பாடியதுதான் திரைப்படத்தில் வரவேண்டும் என கூறிவிட்டு சென்றுவிட்டார் அது ஜனனி ஜனனி என்கிற பாடல். இளையராஜாவின் பாடல்களிலேயே மிகவும் பரவலாக போற்றப்படும் ஒரு பாடலாக இன்று வரை அந்த பாடல் இருக்கிறது.
