Connect with us

ஒரு உலக சினிமாவுக்கு இப்படி ஒரு வசூலா.. மாஸ் காட்டிய சூரியின் கொட்டுக்காளி

kottukaali

News

ஒரு உலக சினிமாவுக்கு இப்படி ஒரு வசூலா.. மாஸ் காட்டிய சூரியின் கொட்டுக்காளி

Social Media Bar

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து தற்போது பல படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி இவர் நடிப்பில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்ததாக நடித்த கருடன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

இதனால் அடுத்ததாக இவர் நடித்த கொட்டுக்காளி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கொட்டுக்காளி திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி, மலையாள நடிகை அன்னாபென் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்தை கூழாங்கல் படத்தின் இயக்குனர் வினோத் இயக்கி கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.

kottu kaali

இதற்கு முன்பே சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இந்த திரைப்படம் நடிகர் சூரிக்கு மற்றுமொரு மைல் கல்லாக அமையும் என அனைவரும் கருத்த தெரிவித்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் வெற்றிமாறன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல், கமல்ஹாசன் உள்ளிட்டோர் படத்தை பாராட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் வசூல் நிலவரம்

கொட்டுக்காளி திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியான நிலையில் படத்தைப் பற்றிய நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

அந்த வகையில் படம் இதுவரை 1.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளிவந்திருக்கிறது. மேலும் திரையரங்குகளில் கொட்டுக்காளி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வரும் நாட்களிலும் இந்த திரைப்படம் மேலும் வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

kottukkaali

மேலும் ஒரு சிலர் இந்த படத்தை பற்றிய கலவையான விமர்சனங்கள் கொடுத்து வரும் நிலையில், சர்வதேச விருதிற்காக எடுக்கப்பட்ட கொட்டுக்காளி படம் சினிமாவை பார்க்கும் பார்வையாளருக்காக எடுக்கப்படவில்லை. இதனால் இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டு வந்திருக்க வேண்டாம் எனவும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

To Top