Connect with us

அரசு கூட உதவல.. மனு அனுப்பிய மக்களுக்கு பத்தே நாளில் உதவிய பாலா!.. என்னா மனுசன்யா!..

kpy bala

News

அரசு கூட உதவல.. மனு அனுப்பிய மக்களுக்கு பத்தே நாளில் உதவிய பாலா!.. என்னா மனுசன்யா!..

Social Media Bar

Actor Bala : நடிகர் விஜயகாந்தை போலவே மக்களுக்கு அதிகமாக நன்மைகள் செய்து வரும் ஒரு நடிகராக கலக்கப்போவது யாரு பாலா அறியப்படுகிறார். பெரும் நடிகர்களை போல லட்சத்தில் சம்பளம் வாங்குபவர் அல்ல பாலா. இருந்தாலும் கூட அவரிடம் இருக்கும் பணத்தை கொண்டு தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

விஜய் டிவியில் பணிபுரிந்த காலங்களிலேயே அனாதை ஆசிரமங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் நிறைய நன்மைகளை செய்தார். இந்த நிலையில் சென்னையில் போன மாதம் வந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய நிவாரண உதவிகளையும் பாலா செய்து கொண்டிருந்தார்.

இதனால் அந்த சமயத்தில் மிகவும் பேசப்பட்ட ஒரு நபராக பாலா இருந்தார் கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரும் பெரும் நடிகர்களே எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த பொழுது பாலா தொடர்ந்து தன்னிடம் இருந்த மொத்த காசையும் மக்களுக்காக செலவு செய்தது பலரையும் அவரை கவனிக்க வைத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் ஒரு கிராமத்துக்கே தண்ணீர் பிரச்சனை இருந்து. தற்சமயம் அதனை சரி செய்து கொடுத்திருக்கிறார் பாலா மேல்மருவத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நீண்ட நாட்களாக தண்ணீரில் அதிகமாக சுண்ணாம்பு இருக்கும் காரணத்தினால் சிறுநீரக பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நீரை சுத்திகரித்து தரும் கருவிகளை வைக்க சொல்லி அரசுக்கு பலமுறை அவர்கள் கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலா பலருக்கும் நன்மைகள் செய்து வருகிறார் எதற்கும் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று கிராமத்தின் சார்பில் ஒரு மனுவை எழுதி அதை பாலாவிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அதனை கேள்விப்பட்ட பாலா அடுத்த 10 நாட்களில் 3 லட்சம் ரூபாய் தயார் செய்து அந்த ஊருக்கு தேவையான தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை அமைத்து கொடுத்து இருக்கிறார். எந்த ஒரு பிரச்சனைக்கும் தண்ணீரை குடிப்போம் ஆனால் தண்ணீரே பிரச்சினையாக இருந்தால் அது மிகவும் மோசமான விஷயமாகும் என்று கூறியிருக்கிறார் பாலா. அரசால் கூட முடியாத விஷயத்தை தனி ஒரு மனிதனாக செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் பாலா.

Articles

parle g
madampatty rangaraj
To Top