News
என் வாழ்க்கையோட லட்சியமே அதுதான்!., அரசு மட்டும் அங்கீகரிக்கணும்!.. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்!.. பாலாவுக்காக சேர்ந்த கூட்டம்!.
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. பாலாவின் காமெடிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலா திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
பாலாவிற்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. ஆனால் வெகு தாமதமாகதான் தெரிந்தது பாலா ஆதரவற்ற மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார் என்பது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலா செய்யும் நன்மைகள் மக்களுக்கு வெளியில் தெரிய துவங்கின.
அதனை தொடர்ந்து சென்னையில் வெள்ளம் வந்தப்போது களத்தில் இறங்கி பல நன்மைகளை செய்து வந்தார் பாலா. அவர் செய்யும் நன்மைகளை கண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து அவருக்கு உதவிகளை செய்து வந்தார்.

இந்த நிலையில் ஒரு இலவச மருத்துவமனை கட்டுவதுதான் தனது வாழ்நாள் கனவு என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் பாலா. அதில் அவர் கூறும்போது எல்லா நோய்க்கும் மருத்துவம் பார்க்கும் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும். முக்கியமாக இதயம் தொடர்பான நோய்களை சரி செய்யும் மருத்துவமனையை கட்ட வேண்டும்.
அங்கு சிகிச்சை அளிக்க வரும் மக்கள் தங்களால் இயன்ற தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். இந்த மாதிரியான ஒரு மருத்துவமனையை கட்ட அரசு அனுமதிக்குமா என தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு மருத்துவமனை கட்டுவதே என் ஆசை என்கிறார் பாலா.

இந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் மக்கள் அந்த மருத்துவமனை கட்ட இலவசமாக நிலம், கட்டுமான வேலைகள் போன்றவற்றை செய்து தருவதாக கூறி முன்வருகின்றனர். இவர்கள் எல்லாம் பாலாவுக்காக தானாக சேர்ந்த கூட்டம் என்றே கூற வேண்டும்.
