காந்த கண்ணழகி.. பார்வையிலேயே சொக்க வைக்கும் கீர்த்தி ஷெட்டி.. ட்ரெண்டாகும் க்ளிக்ஸ்..!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியின் காரணமாக மிக குறுகிய காலக்கட்டத்திலேயே அதிக பிரபலமடைந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தெலுங்கில் உப்பன்னா, ஷியாம் சிங்கா ராய் மாதிரியான திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

Social Media Bar

அந்த திரைப்படங்களுக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கிய வாரியர் திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் வந்த புல்லட் என்கிற பாடல் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

அதற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தற்சமயம் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அவருக்கு எக்கச்சக்கமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில்தான் நடித்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அவரை வரவேற்பை பெற நினைக்கிறார் என பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.