Actress
சிவப்பு ட்ரெஸ்ஸில் ரசிகர்களை குஷியேத்தும் க்ரீத்தி ஷெட்டி!..
Krithi Shetty: முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகை மக்கள் மத்தியில் பிரபலமாவது கடினமான விஷயமாக இருந்தது. ஏனெனில் கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கு முக்கியத்துவம் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு இருக்காது.

ஆனால் இப்போது வளர்ந்து வந்த தொழில்நுட்பம் காரணமாக புதிதாக அறிமுகமாகும் நடிகைகளுக்கு கூட சமூக வலைதளம் மூலம் மக்களிடம் அதிக வரவேற்புகள் கிடைக்கின்றன. இப்படி வந்த புதிதிலேயே பெரும் பிரபலமானவர்தான் நடிகை கீர்த்தி ஷெட்டி.

க்ரீத்தி ஷெட்டி மலையாள சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு அதற்கு அடுத்த படங்களிலேயே தெலுங்கில் அதிக வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து சியாம் சிங்கா ராய் என்கிற திரைப்படத்தில் அவர் நடித்தார்.

அது நல்ல வரவேற்பை பெற்று தந்தது. பிறகு அவர் நடித்த வாரியர் திரைப்படத்தில் வரும் புல்லட் பாடல் தென்னிந்தியா முழுவதும் மிகப் பிரபலம் அடைந்தது. இதனை தொடர்ந்து கீர்த்தி ஷெட்டிக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. இந்த நிலையில் தற்சமயம் அனைவரையும் அசத்தும் வகையில் சிவப்பு உடையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

