என் பாட்டுக்கே காசு கொடுக்கிறேன்.. இளையராஜா விஷயத்தால் மனம் வருந்திய கே.எஸ் ரவிக்குமார்..!
தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக இயக்குனராக நிலைத்து நின்ற பிரபலமான இயக்குனர்களில் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கியமானவர். தமிழில் டாப் நடிகர்களான பலருடன் வேலை பார்த்து இருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.
பல நடிகர்களை வைத்து ஹிட் திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார் முக்கியமாக நடிகர் கமல்ஹாசனை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். இந்த நிலையில் கே.எஸ் ரவிக்குமார் சமீபத்தில் இளையராஜாவின் காப்பிரைட் பிரச்சனைகள் குறித்து பேசி இருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது ஒரு பாடலுக்கான காப்புரிமையை ஒரே ஒரு இசையமைப்பாளர் மட்டும் எப்படி பெற முடியும். ஒரு பாடல் மக்கள் மத்தியில் சென்று பிரபலம் அடைவதற்கு அப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கிய இயக்குனர் தான் காரணம்.

அந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தான் படத்தில் இசையமைப்பாளர்கள் இசை அமைக்கிறார்கள். அதேபோல அதற்கு செலவு செய்த தயாரிப்பாளரும் காரணம் தான். அப்படி இருக்கும் பொழுது பாட்டிற்கான காப்புரிமை தயாரிப்பாளரைதான் சென்றடைய வேண்டும்.
நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எனது பாடலை போடுவதற்கு நான் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. நான் இயக்கிய படங்களுக்கு தேவா இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என்று பலரும் இசையமைத்து இருக்கின்றனர்.
அந்த பாடல்களை எல்லாம் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் போட வேண்டுமென்றால் அதற்கு ஒரு தொகையை கொடுத்து நானே காப்புரிமை வாங்க வேண்டி இருக்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.