Cinema History
நேத்து பாட்டு போட சொன்னா என்ன ஏமாத்திட்டீங்க நீங்க!.. அந்த ஒரு பாட்டுக்காக கே.எஸ் ரவிக்குமாருக்கும் தேவாவுக்கும் பஞ்சாயத்து!.
KS ravikumar : சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் தேவாவும் முக்கியமானவர். பொதுவாக கர்நாடக இசை மெல்லிசை போன்றவற்றை சினிமாவிற்குள் பல இசையமைப்பாளர்கள் கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் கிராமத்து மக்களின் நிலத்தின் பாடலான கானா பாடல்களை திரைக்கு கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் தேவா மட்டுமே. அதனால் தான் இப்போதும் தேவா இசையமைத்த பாடல்கள் கிராமபுறங்களில் அதிகமாக பிரபலமாக இருப்பதை பார்க்க முடியும்.
அதேபோல அனைத்து விதமான இசையும் தேவாவிற்கு அத்துபடி என்று கூறலாம் கானா பாடல்கள் மட்டுமின்றி மெலோடி பாடல்களிலும் நிறைய வெற்றி பாடல்களை கொடுத்து இருக்கிறார் தேவா. அவர் இசையமைத்த படங்களில் பாட்ஷா மாதிரியான சில திரைப்படங்கள் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கின்றன.
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நட்புக்காக திரைப்படம் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அந்த திரைப்படத்திற்கு தேவாதான் இசையமைத்தார். அப்பொழுது நண்பர்கள் இருவரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாடல் வேண்டும் என்று கேட்ட பொழுது மீசைக்கார நண்பா என்கிற பாடலை தேவா பாடி கொடுத்தார்.
அந்த பாடல் முதல் நாள் கே.எஸ் ரவிக்குமாருக்கு பிடித்திருந்தாலும் மறுநாள் அந்த பாடல் பிடிக்கவில்லை. திரும்ப தேவாவிடம் சென்று இந்த பாடலை மாற்றி கொடுங்கள் எனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை நீங்கள் நேற்று பாடிய போது எனக்கு பிடித்தார் போல தோன்றியது .
நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார் ஆனால் அப்பொழுது அங்கு வந்த படத்தின் தயாரிப்பாளரான ஏ எம் ரத்தினம் கூறும் பொழுது இந்த பாடல் கண்டிப்பாக நல்ல வெற்றியை கொடுக்கும் அதனால் இதை மாற்ற வேண்டாம் என்று கூறியிருக்கிறார். அதேபோல நட்புக்காக திரைப்படம் வெளியான பிறகு அந்த பாடல் நல்ல வெற்றியை கொடுத்தது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்