Tamil Cinema News
யாரை பார்த்தாலும் பாலகிருஷ்ணாவுக்கு அப்படி ஒரு சந்தேகம் உண்டு… சீக்ரெட்டை கூறிய கே.எஸ் ரவிக்குமார்.!
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து தனக்கென தனி ரசிக்கப்பட்டாளத்தை கொண்டிருக்கும் ஒரு நடிகராக பாலகிருஷ்ணா இருந்து வருகிறார்.
தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பாலகிருஷ்ணா பிரபலமான நடிகராக இருந்தாலும் மற்ற சினிமாக்களில் அதிகமாக கேலிக்கு உள்ளாகும் ஒரு நடிகராக பாலகிருஷ்ணா இருப்பார்.
ஏனெனில் நடிப்பு என்று பார்க்கும் பொழுது பாலகிருஷ்ணாவுக்கும் பெரிதாக நடிப்பு என்று எதுவும் இருக்காது. அதேபோல அந்த திரைப்படத்தில் நிறைய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இருக்கும்.
அவையெல்லாம் அதிகமாக நகைச்சுவைக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனாலேயே பாலகிருஷ்ணாவை யார் பார்த்து சிரித்தாலும் அது பாலகிருஷ்ணாவுக்கு பிடிக்காதாம்.
இந்த நிலையில் இதுக்குறித்து கே.எஸ் ரவிக்குமார் கூறும் பொழுது யாராவது ஒரு நபர் பாலகிருஷ்ணாவை படப்பிடிப்பில் பார்த்து சிரித்து விட்டால் எதற்காக அவன் என்னை பார்த்து சிரித்தான் என்று கோபமாக அவனிடம் சென்று கேட்பாராம்.
தகுந்த காரணம் கூறவில்லை என்றால் இன்னும் கோபம் அடைந்து விடுவாராம் கே.எஸ் ரவிக்குமார். ஒரு படத்தை பாலகிருஷ்ணா வைத்து எடுத்துக் கொண்டிருந்த பொழுது கே.எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர் இதே மாதிரி பாலகிருஷ்ணாவை பார்த்து சிரித்து அது பெரிய பிரச்சனை ஆனது என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.
