Tamil Cinema News
லோகேஷ் கனகராஜை பார்த்தால் பாலச்சந்தர் அதிர்ச்சியாகிடுவார் போல.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன புது விஷயம்.!
சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்குனர்களின் சம்பளம் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது முத்து திரைப்படத்தை இயக்கும் பொழுது எனது சம்பளம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டது.
அதற்கு முன்பு வரை நான் 12 லட்சம் சம்பளமாக வாங்கி வந்தேன். முத்து திரைப்படத்தின் போது ரஜினி சார் என்னிடம் என்ன சம்பளம் வாங்குகிறீர்கள் என்று கேட்டார். நான் 12 லட்சம் என்று கூறினேன்.
உடனே எனக்கு 15 லட்சம் சம்பளம் எழுதி கொடுத்து அதை பாலச்சந்தர் சாரிடம் கொடுங்கள் அவர்களுக்கு இந்த சம்பளத்தை கொடுப்பார் என்று கூறினார். நானும் சரி என்று பாலச்சந்தரிடம் அதைக் கொடுத்தேன்.
இயக்குனர் பாலச்சந்தர்:
அதை பார்த்து பாலச்சந்தர் அதிர்ச்சி அடைந்து விட்டார். என்னய்யா அதுக்குள்ள 15 லட்ச ரூபாய் சம்பளம் கேட்கிற? எத்தனாவது படம் இது உனக்கு என்று என்னிடம் கேட்டார்.
நான் இது 13 வது படம் என்று கூறினேன் 13 வது படத்திற்கே 15 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறாயா? நான் இதுவரை எக்கச்சக்கமாக படம் எடுத்து விட்டேன். ஆனால் மொத்தமாக 5 லட்ச ரூபாய் கூட நான் சம்பளமாக வாங்கியது கிடையாது என்று அதிர்ச்சியாக கூறினார் பாலச்சந்தர் என்று அந்த விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.
ஆனால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஐந்தாவது திரைப்படத்திற்கு 30 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கியதாக ஒரு பேச்சு உண்டு. லோகேஷ் கனகராஜை எல்லாம் இப்பொழுது பாலச்சந்தர் இருந்து பார்த்தார் என்றால் அதிர்ச்சியடைந்து விடுவாரோ என்று இது குறித்து பேசி வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்