இயக்குனர் திட்டுவார்னு சரத்குமார் செய்த வேலை!.. மொத்த செட்டும் பரபரப்பான சம்பவம்!.

வில்லன் நடிகராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் அவர் வில்லனாக நடித்தாலும் போக போக அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கதாநாயகனாகவும் நல்ல வெற்றியை கொடுத்தார் சரத்குமார். இந்த நிலையில் சரத்குமாருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர துவங்கின. முக்கியமாக சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன.

அதில் முக்கியமான திரைப்படம் நாட்டாமை. நாட்டாமை திரைப்படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். இதுக்குறித்து கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது பெரிய டயலாக் ஒன்றை அப்போது படமாக்கினோம்.

Social Media Bar

சிங்கிள் ஷாட்டில் பெண்ணின் மகத்துவத்தை சரத்குமார் பேசுவது போன்ற காட்சி. அந்த காட்சி படமாக்கும்போது நல்லப்படியாக டயலாக்கை பேசி வந்த சரத்குமார் திடீரென கீழே உதைத்துவிட்டு யார் இங்கே இந்த கல்லை போட்டது என சத்தம் போட்டுவிட்டு சென்றார்.

யார் அங்கு கல்லை போட்டது அருமையான வசனம் இப்படி பாதியிலேயே நின்றுவிட்டதே என கே.எஸ் ரவிக்குமார் சென்று பார்த்தப்போது அங்கு கல்லே இல்லை. படக்குழுவும் எங்கே அந்த கல் என தேட அந்த இடத்தில் கல்லே இல்லை.

அந்த சமயத்தில் வசனத்தை மறந்துவிட்டார் சரத்குமார். அதை சமாளிப்பதற்காக அங்கு கல் இருந்தது. அதனால் வசனத்தை பேசவில்லை என பாவனை செய்துள்ளார். கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் அதை பகிர்ந்திருந்தார்.