Latest News
நெருங்கிய நண்பரை ஒதுக்கிய அஞ்சலி!. மனம் வருந்திய ப்ளாக் பாண்டி..!
என்னதான் சினிமாவில் உச்சத்தை தொட்டாலும் தனது கல்லூரி கால நண்பர்களுடன் இன்னமும் பழக்கத்தில் இருப்பவர் நடிகர் விஜய். அதே போல சிவகார்த்திகேயன் மாதிரியான அனைத்து பெரிய நடிகர்களுமே அவர்கள் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் கூட இருந்த நட்பை கைவிட்டது கிடையாது.
ஆனால் அஞ்சலி அப்படியான விஷயத்தை செய்ததாக கூறப்படுகிறது. கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அஞ்சலி. ஆரம்பத்தில் அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வரவில்லை.
ஆனால் அங்காடி தெரு திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு கொஞ்சம் வாய்ப்புகள் வர துவங்கின. இந்த நிலையில் கனா காணும் காலங்கள் டிவி தொடரில் நடித்து வந்த நடிகர் ப்ளாக் பாண்டியும் அஞ்சலியும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
ப்ளாக் பாண்டி அஞ்சலியை போடி வாடி என்றுதான் அழைப்பாராம். ஆனால் அஞ்சலி சினிமாவில் வளர துவங்கிய பிறகு அவர் ப்ளாக் பாண்டியை கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதுக்குறித்து ப்ளாக் பாண்டி ஒரு பேட்டியில் கூறும்போது சகலகலா வல்லவன் திரைப்படத்தில் நடித்தப்போது நானும் அஞ்சலியும் அந்த படத்தில் நடித்தோம்.
ஆனால் அஞ்சலி அதிகமாக என்னிடம் பேசவில்லை. ஏன் பேசவில்லை எனக் கேட்டப்போது அதற்கு அவர் பதிலே தரவில்லை. அதற்கு பிறகு இருமுறை மெசேஜ் செய்தேன். அதற்கும் பதில் இல்லை. இந்த நிலையில் இதுவும் கடந்து போகும் என அதை விட்டுவிட்டேன் என்கிறார் ப்ளாக் பாண்டி.