வரணும்னு விதி இருந்தா அந்த ரஜினி படம் வரும்.. மனம் வருந்திய கே.எஸ் ரவிக்குமார்.!
நடிகர் ரஜினி, கமல், அஜித் என்று பல பெரிய நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர்களுக்கான வரவேற்பு என்பது குறைய துவங்கும்.
அந்த வகையில் கே.எஸ் ரவிக்குமாருக்கும் இப்பொழுது பெரிதாக வரவேற்புகள் என்பதே இல்லை. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இந்த நிலையில் ரஜினியுடன் ஒரு படம் எடுக்கப்படாமல் போனது குறித்து அவர் பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது ராணா என்கிற திரைப்படத்தை ரஜினியை வைத்து எடுக்க நினைத்தேன். அதன் திரைக்கதையிலிருந்து டயலாக் வரை அனைத்துமே முடித்துவிட்டேன்.

படப்பிடிப்பு துவங்க இருந்த நேரத்தில் ரஜினிகாந்த் கூட முடியாமல் போனது. அவருக்காக படக் குழு காத்திருந்தது. ஆனாலும் யாரும் காத்திருக்க வேண்டாம். என்று ரஜினி கூறியதால் பிறகு நாங்கள் வேறு படம் எடுக்க சென்று விட்டோம். அதற்கு பிறகு திரும்ப ராணா திரைப்படத்தை எடுக்கவே இல்லை.
ஆனால் இப்பொழுதும் அந்த கதையை படிக்கும் பலரும் என்னிடம் வந்து இது ஒரு அருமையான கதை என்று கூறுகிறார்கள். என்றாவது ஒருநாள் இந்த கதை படமாக்கப்படும் என்று நம்புகிறேன்.
எப்போதோ படமாக்க வேண்டும் என்று நினைத்த பொன்னியின் செல்வன் திரைப்படமே இப்பொழுது படமாக்கப்படும் பொழுது என் படமும் எப்படியும் ஒரு நாள் படமாக்கப்படும் என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.