நடிகையை அவமானப்படுத்தியதால் ஓடாமல் போன விஜய் படம்.. ஓப்பன் டாக் கொடுத்த இயக்குனர்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக தற்சமயம் இருந்து வருகிறார் இந்த நிலையை அடைவதற்கு விஜய் கடந்து வந்த பாதை என்பது மிக முக்கியமானது.

முதல் படத்திலேயே தோல்வியை கண்ட ஒரு நடிகர் தான் நடிகர் விஜய் ஆனாலும் கூட விடாமுயற்சியுடன் போராடி தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பெறுவதற்கு விஜய்க்கு பல வருடங்கள் ஆனது. பெரும்பாலும் திரைத்துறையில் உள்ளவர்கள் கூறும் பொழுது பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற காதல் திரைப்படங்களில் விஜய் நடிக்க துவங்கிய பிறகுதான் அவருடைய மார்க்கெட் துவங்கியது.

அவருக்கென்று வரவேற்பும் சினிமாவில் வரத் துவங்கியது என்று கூறுகின்றனர். அதேபோல பெரும்பாலும் அப்போதைய சமயங்களில் அவருக்கு வெற்றி கொடுத்த படங்களாக காதல் கதை கொண்ட திரைப்படங்கள்தான் இருக்கின்றன.

vijay
vijay
Social Media Bar

இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் அப்போதைய சமயத்தில் தோல்வியை கண்டிருக்கின்றன. அது ஏன் என்பது பலருக்குமே தெரியாத விஷயமாக இருக்கிறது. அப்படி விஜய் படத்தில் தோல்வியை கண்ட ஒரு திரைப்படம் மின்சார கண்ணா.

இப்போது வரை டிவி சேனல்களில் போட்டால் மக்கள் பார்க்கும்  திரைப்படமாக மின்சார கண்ணா திரைப்படம் இருக்கிறது. அதில் வரும் உன் பெயர் சொல்ல ஆசைதான் என்கிற பாடல் எப்பொழுதும் பிரபலமாக இருக்கிறது.

நடிகையால் ஓடாமல் போன படம்:

இருந்தும் அந்த படம் ஏன் ஓடவில்லை என கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவருக்கு வரும் பொழுது கதாநாயகி தேர்ந்தெடுப்பதில் நாங்கள் தவறு செய்துவிட்டோம் படத்தின் தயாரிப்பாளர் மும்பை வரை சென்று ஒரு பெண்ணை அழைத்து வந்து அவர்தான் கதாநாயகி என்று கூறினார்.

புதுமுகமாக அந்த பெண்ணை அறிமுகப்படுத்தியது கூட ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் அப்பொழுது மிகப் பிரபலமாக இருந்த ரம்பாவை துணை கதாநாயகியாக நடிக்க வைத்ததுதான் பிரச்சனையாகிவிட்டது.

ramba
ramba

இது அப்போதைய ரசிகர்கள் பலருக்குமே பிடிக்கவில்லை. அதனால் அந்த படம் ஓடவில்லை என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார். ரம்பாவின் ரசிகர்களால் ஓடாமல் போன ஒரு விஜய் படம் என்றால் அது மின்சார கண்ணா திரைப்படமாக தான் இருக்கும்.