அந்த விஷயத்துக்காக ராமராஜனை தப்பா நினைக்க வேண்டாம்!.. அந்த விபத்துதான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிப்படையாக கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சினிமாவில் ஒரு காலத்தில் பெரும் புகழோடு இருந்தவர் நடிகர் ராமராஜன். ராமராஜன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 20க்கும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன் மட்டுமே.

அவ்வளவு வெற்றிகளை கொடுத்த ராமராஜன் எவ்வளவு வேகத்திற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டாரோ அதே வேகத்திற்கு சரிவையும் கண்டார். சில வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்புகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது.

ராமராஜன் வயதான தோற்றத்தை அடைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். இந்த படம் விரைவில் திரைக்கும் வரவிருக்கிறது.

வெகு வருடங்கள் கழித்து ராமராஜனுக்கு இது ஒரு கம் பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராமராஜன் குறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது, படத்திற்காக நான் முதன் முதலில் க்ளாப் தட்டினேன் என்றால் அது ராமராஜன் படத்திற்காகதான். அதற்கு பிறகுதான் புரியாத புதிர் திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது.

ramarajan
ramarajan
Social Media Bar

எனவே இப்போது 40க்கும் மேற்பட்ட படத்திற்கு நான் இயக்குனராக இருந்தாலும் நான் க்ளாப் தட்டிய முதல் ஹீரோ ராமராஜன் தான். அதனால்தான் அவரது படம் என கூறியதுமே ஒரே ஒரு காட்சி நடித்தாலும் சரி நான் அவரது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என கூறி இந்த படத்தில் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

மேலும் அவர் கூறும்போது படத்தில் ராமராஜன் கால்களை கொஞ்சம் உந்திதான் நடப்பார். ஆனால் அதற்காக யாரும் அவரை தவறாக நினைக்க வேண்டாம். அவருக்கு இடையில் நடந்த விபத்தின் காரணமாகதான் அப்படி நடக்கிறார். அந்த விபத்தில் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

ஆனால் ராமராஜன் மட்டும்தான் பிழைத்துக்கொண்டார். அவர் இளையராஜாவின் இசையில் இன்னொரு படம் நடிக்க வேண்டும் என விதி உள்ளது என கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.