News
நீங்க பெரிய ஒழுங்கா.. பாலியல் விஷயத்தில் விஷாலுக்கு விழுந்த அடி.. கேள்வி கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!
தற்போது சினிமா துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் அவலங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினை நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென் இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்திருக்கும் சம்பவம் என்றால், தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையில் இருந்து வெளிவந்த தகவல் தான்.
இந்தச் செய்தி தமிழ் சினிமா வரை எதிரொலித்து கொண்டிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்கள் இது குறித்து தமிழ் நடிகர்களிடம், நடிகைகளிடம் கேள்வி கேட்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இது குறித்து கேள்வி கேட்கும்போது அவர் விஷால் பற்றி கூறிய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமா துறையை அதிரச்செய்த சம்பவம்
சினிமாவில் சாதிப்பதற்காக நடிகைகள் பல கஷ்டங்களை கடந்து வரும் நிலையில் சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அவர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினை கொடுத்து வருவது அனைத்து மொழி சினிமா துறையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் மலையாள திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பிரபல மலையாள சினிமா நடிகர் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மலையாள சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழு ஒன்றை கேரளா அரசு அமைத்தது . இதன் மூலம் நடிகைகளின் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை வெளிவந்து கேரளா சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பல முக்கிய நடிகர்களும் இதில் சிக்கியுள்ள நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரின் மீதும் புகார்கள் எழுந்து வருகிறது.
விஷாலை சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்
இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் விஷாலிடம் கேட்கும்போதும் அதற்கு அவர் கோபமான பதிலையும் அளித்திருந்தார். இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடிகைகளுக்கு நடக்க கூடாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் விஷால் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, முதலில் அவரை நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்த சொல்லுங்கள்.

ஒரு பிரச்சனை என்று பெண்கள் முன் வந்து கூறும் போது நடிகர் சங்கத்தை அணுகுவதற்கு எந்த ஒரு தயக்கமும், அச்சமும் இல்லாமல் இருக்கிறார்களா? என்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் விஷாலிடம் சில கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்.
தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், விஷால் மீது பல கலவையான விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.
