News
51 வயசில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. லட்சுமி ராம கிருஷ்ணனிடம் தவறாக நடந்துக்கொண்ட இயக்குனர்..!
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். லட்சுமி ராமகிருஷ்ணனை பொருத்தவரையில் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக திரைத்துறையில் வலம் வந்தவர் என்று கூறலாம்.
பெரும் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார். 40 வயதில்தான் அவர் சினிமாவிற்குள் என்று ஆனார்.

அதனை தொடர்ந்து சினிமாவில் பல துறைகளில் பணிபுரிந்து இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். பல வெற்றி படங்களுக்குப் பின்னால் லட்சுமி ராமகிருஷ்ணன் ஏதாவது ஒரு துறையில் பணிபுரிந்து இருப்பதை பார்க்க முடியும்.
சினிமாவில் வாய்ப்பு:
அந்த அளவிற்கு பிரபலமானவர். பிறகு தமிழ் திரைப்படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் இவரை பார்த்திருக்க முடியும்.
யுத்தம் செய் திரைப்படத்தில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடித்தார். அதற்குப் பிறகுதான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான எபிசோடுகளை கடந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை அசால்டாக நடத்தி முடித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

அது அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது அதே சமயம் அதிக பிரச்சனைகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. பிறகு அவள் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தபொழுது அவருக்கு நடந்த அனுபவம் ஒன்றை கூறியிருக்கிறார்.
மலையாள படத்தில் பிரச்சனை:
லெட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் நடித்த காட்சிகள் சரியாக இருக்கிறதா என்று அங்கு இருக்கும் டிஸ்ப்ளேவில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இயக்குனரும் அங்கு நின்றுதான் காட்சிகள் சரியாக வந்திருக்கிறதா என்று பார்ப்பார். ஆனால் அங்கு இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் கைமீது அவரது கையை வைத்திருக்கிறார். பிறகு அந்த கையை மெதுவாக நகர்த்தி உள்ளார்.
இதனை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன் வேகமாக கையை உதறி எடுக்கிறார். உடனே இது உங்களுக்கு பிடிக்கவில்லையா என்று இயக்குனர் கேட்டு இருக்கிறார். இதனால் கடுப்பான லட்சுமி ராமகிருஷ்ணன் நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் பத்திரிகையாளர்களிடம் பேட்டியாக இதை கூறி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
பிறகு அந்த இயக்குனர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த பொழுது தனக்கு 51 வயது ஆகிவிட்டது என்று கூறுகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
