தனுஷ் இயக்குனருடன் அடுத்த படம்!.. பூஜைக்கு தயாராகும் லெஜண்ட் சரவணன்!..

Legend saravana : என்னதான் பெரும் தொழிலதிபராக இருந்தாலும் சினிமா பிரபலங்களுக்கு இருக்கின்ற வரவேற்பும் புகழும் தொழிலதிபர்களுக்கு இருப்பதில்லை. எனவே சினிமாவின் மூலமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற வேண்டும் என சிலர் நினைப்பதுண்டு.

அப்படியான தொழில் அதிபர்களில் முக்கியமானவர் நடிகர் லெஜண்ட் சரவணா. லெஜண்ட் சரவணா தனது முதல் திரைப்படம் அதிக பொருட் செலவில் உருவாக்கினார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதாக வெற்றியை பெறவில்லை சொல்லப்போனால் அந்த படம் பெரும் தோல்வியை கண்டது என்றுதான் கூற வேண்டும்.

Social Media Bar

ஆனால் கதையாக ஒரு சிறந்த கதையைக் கொண்டிருந்தது லெஜண்ட் திரைப்படம். இருந்தாலும் அதை படமாக்குவதில் இருந்த பிரச்சனைகள் அந்த படத்தை தோல்வியடைய செய்துவிட்டன. இருந்தாலும் மனம் தளராத லெஜண்ட் சரவணன் அடுத்த திரைப்படத்திற்கு தயாராகி விட்டார்.

இந்த இரண்டாவது திரைப்படத்தை இயக்குனர் ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் எதிர்நீச்சல் காக்கி சட்டை , கொடி , பட்டாசு போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கின்றன. எனவே லெஜண்ட் சரவணன் இயக்கும் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக அமையும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு சீக்கிரத்திலேயே துவங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.