News
லியோ படம் எல்.சி.யுவில் வருதா!.. விளக்கம் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!.
தற்சமயம் விஜய் நடித்து வெளியாகவிற்கும் லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. நாட்கள் ஆக ஆக எப்போது 19ஆம் தேதி வரும் லியோ படத்தை திரையரங்கில் சென்று பார்ப்போம் என்று வெகுவாக காத்திருக்க துவங்கி விட்டனர்.
இந்த நிலையில் லியோ திரைப்படம் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் என்று ஒரு பேச்சு படப்பிடிப்பு துவங்கிய நாள் முதல் இருந்து வந்தது. அதேபோல இந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் கிட்டத்தட்ட ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் திரைப்படத்தோடு அதன் ட்ரைலரும் ஒத்துப்போவதை பார்க்க முடிகிறது.
ஒரு மிகப்பெரும் ரௌடியாக இருக்கும் ஒருவன் அதை மறைத்து சாதாரண மனிதனாக குடும்பத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக தான் ஹிஸ்டரி ஆப் வைலென்ஸின் கதையும் இருக்கிறது. எனவே லியோ படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கு நடுவே இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் வருமா என்கிற கேள்வியும் இருக்கிறது. இது குறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்கும் பொழுது இது இரண்டுக்குமே என்னால் பதில் சொல்ல முடியாது. அது படத்தின் எதிர்பார்ப்பை கெடுத்துவிடும் எனவே படத்தை திரையரங்குகளில் அனைவரும் பார்த்த பிறகு நான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த திரைப்படம் எல் சி யூ வில் வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன என கூறப்படுகிறது. அதனால்தான் லோகேஷ் கனகராஜ் எதையும் கூறவில்லை என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.
