தமிழ் சினிமாவிலேயே வேற எந்த படமும் செஞ்சது கிடையாது!..ஜெயிலரை பின் தள்ளிய லியோ…

தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை உண்டாக்கி வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. நாளுக்கு நாள் லியோ திரைப்படம் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் வசூலை ப்ரேக் செய்யுமா என்கிற கேள்வி இருந்துக்கொண்டே இருக்கிறது.

ஏனெனில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் இருந்தது. போதா குறைக்கு லியோ ட்ரைலர் வெளியான பிறகு அதுக்குறித்து சில எதிர்மறையான விமர்சனங்களும் வர துவங்கியுள்ளன.

இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் பேசும்போது லியோ குறித்து புதிய செய்தி ஒன்றை பகிர்ந்திருந்தார். லியோ திரைப்படத்தை வெளியிடுவதில் அனைத்து திரையரங்குகளும் ஆவல் காட்டி வருகின்றன. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் எப்போதுமே அவர்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தந்துள்ளது.

எனவே லியோ படத்தின் மீது நம்பிக்கை கொண்ட டிஸ்ட்ரிபூட்டர்கள் மொத்தமாக 7 பேர் லியோ படத்தை 100 கோடிக்கு வாங்கியுள்ளார்களாம். நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தை கூட இந்த தொகைக்கு வாங்கவில்லையாம். ஜெயிலர் திரைப்படமாவது திரையில் வெளியாகிதான் லாபம் ஈட்டி தந்தது,

ஆனால் லியோ திரைப்படம் திரையரங்கிற்கு வராமலே இத்தனை கோடி லாபம் ஈட்டி தந்துள்ளது. தமிழ் சினிமாவிலேயே இவ்வளவு ரூபாய்க்கு விற்பனையான முதல் படம் லியோதான் என கூறியுள்ளார் தனஞ்செயன்.