News
விஜய்யோட மொத்த தோல்வியும் ஒண்ணு சேர்ந்து லியோல வருது!. லியோ ட்ரைலரை டீகோட் செய்யும் நெட்டிசன்கள்!..
தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படத்தில் முக்கியமான திரைப்படமாக லியோ திரைப்படம் உள்ளது. லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாலயே அந்த படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்சமயம் லியோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது டிரைலரை பார்த்தவரை லியோ தாஸ் என்பது பயங்கரமான ஒரு ரவுடி கதாபாத்திரம் என தெரிகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு அதிகமான எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சகஜமாக வாழ்ந்து வரும் இன்னொரு விஜய் கதாபாத்திரத்தை தொல்லை செய்வதாக தெரிகிறது.
அதன் பிறகு அந்த கூட்டத்தை வன்முறை மூலமாக இந்த விஜய் எப்படி எதிர்க்கிறார் என்பதாக கதை இருக்கிறது, என்பதை ட்ரைலர் மூலம் அறிந்துள்ளனர் ரசிகர்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி விஜய்யின் தீவிர ரசிகர்கள் சில விஷயங்களை கண்டறிந்துள்ளனர்.
அதாவது எந்த விஷயங்களால் எல்லாம் விஜய் கேலிக்கு உள்ளானாரோ அந்த விஷயங்கள் எல்லாத்தையும் லியோ படத்தில் வைத்து லோகேஷ் கனகராஜ் அதை வெற்றியாக மாற்ற நினைக்கிறார் என கூறப்படுகிறது. உதாரணமாக இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என விஷ்ணு திரைப்படத்தில் தொட்ட பெட்டா பாடலில் ஒரு வார்த்தை வரும்.
அந்த வார்த்தை காரணமாக விஜய் அதிகமாக விமர்சிக்கப்பட்டார் தற்சமயம் லியோ திரைப்படத்தில் நான் ரெடிதான் வரவா பாடலிலும் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று போட்டுள்ளனர். ஆனால் இந்த முறை விஜய் கேளிக்கு உள்ளாகவில்லை.
அதேபோல நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் விஜய் ஒருவர் கழுத்தை பிடிப்பது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சி மிகவும் கேளிக்கைக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. அதே மாதிரி ஒரு காட்சி இந்த படத்திலும் உள்ளதாம். எனவே இந்த மாதிரி விஜய் அதிகமாக கேலிக்கு உள்ளான விஷயங்களை மாஸாக மாற்றி கொடுத்திருக்கிறார் லோகேஷ் என கூறப்படுகிறது
லியோ ட்ரைலரை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
