பெரிய பட்ஜெட்டில் எடுத்து தமிழில் வெளியாகாமல் போன ராஜா காலத்து படங்கள்!..
பொதுவாக சினிமாவில் ஆக்ஷன் படங்கள், காமெடி படங்கள், காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள், அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள், பேய் படங்கள், கடவுள் படங்கள், போன்ற பல வகையான கதைகளை மையமாக வைத்து சினிமா தயாரித்து வெளியிடுவார்கள் . இதில் ஒரு சிலருக்கு நகைச்சுவை படம் பிடிக்கும். ஒரு சிலருக்கு பேய் படம் பிடிக்கும். ஒரு சிலருக்கு ஆக்ஷன் படம் பிடிக்கும். இவ்வாறு சினிமாவில் பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்படும் படங்களும் சினிமாவில் அதிக வரவேற்பு பெரும். மேலும் அதிக அளவில் வசூல் சாதனையும் பெரும்.
இந்த வரிசையில் சில ராஜா காலத்து படங்கள் எடுக்கப்பட்டு ,அது பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கும் தமிழ் படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வரலாற்று பின்னணி கொண்ட படங்கள்
சில கதைகள் உண்மை சம்பவங்களை தழுவி அதனை திரைப்படங்களாக எடுத்து வெளியிடுவார்கள். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திருந்தால் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
இதுபோல பல வரலாற்று பின்னணி கொண்ட படங்களை நாம் பார்த்திருப்போம். அந்த அந்த கதைகள் உண்மை பின்னணியை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் அல்லது கற்பனையாக ஒரு கதை உருவாக்கப்பட்டு படம் வெளிவந்திருக்கும். ஆனால் இவ்வாறு எடுக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெறும்.

தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படங்களாகும். மேலும் வேறு மொழிகளில் எடுக்கப்பட்டிருந்தாலும், அது தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடும் பொழுது அது தமிழ் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெறும்.
பெரிய பட்ஜெட்டில் உருவாகி வெளிவராமல் போன ராஜா காலத்து படங்கள்
இந்நிலையில் தமிழில் குறிப்பிட்ட நாட்கள் வரைக்கும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பிறகு அந்த படத்தை எடுக்காமல் இன்றளவும் இருக்கக்கூடிய படங்களின் பட்டியலை காண்போம்.
சுந்தர் சி யின் இயக்கத்தில் இசை புயல் ஏ. ஆர். ரகுமானின் இசையில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி கதாநாயகர்களாக நடித்த சங்கமித்ரா திரைப்படம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிவடைந்த நிலையில் படத்திற்கான பட்ஜெட் அதிகமானதால் தற்பொழுது இந்த படம் கைவிடப்பட்டது. ஆனால் நிச்சயம் இந்த படத்தை ஒருநாள் நாங்கள் எடுத்து முடிப்போம் என படக்குழு தெரிவித்திருக்கிறார்.
அடுத்ததாக கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இசை புயல் ஏ. ஆர். ரகுமானின் இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ராணா. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாததால் இந்த படைப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்னும் தொடரவில்லை.
அடுத்ததாக இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் விக்ரம் நடிப்பில் வெளியாக இருந்த படம் கரிகாலன். இந்த படத்திற்கான பட்ஜெட் அதிகமானதால் இந்த படம் கைவிடப்பட்டது.
அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகாமல் சென்ற பாடம்தான் மருதநாயகம். இந்த படப்பிடிப்பு ஆரம்பித்து இடையில் கைவிடப்பட்டது.