Cinema History
நான் ஒரு படம் எடுக்க போறேன். ஆனா ரொம்ப மோசமா இருக்கும்!.. வெளிப்படையாக கூறிய லிவிங்ஸ்டன்..
தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். தமிழில் நிறைய திரைப்படங்களில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவற்றில் என் புருசன் குழந்தை மாதிரி மாதிரியான திரைப்படங்கள் பிரபலமானவை.
கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பை இழந்த லிவிங்க்ஸ்டன் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார். ஆனால் இப்போதும் வாய்ப்பு கொடுத்தால் நடிக்க தயார் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். லிவிங்க்ஸ்டனுக்கு யாருமே வாய்ப்பு அளிக்காததால் அவர் விரக்தியில் இருக்கிறார்.
தற்சமயம் இதுக்குறித்து பேசும்போது தான் ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறியுள்ளார் லிவிங்ஸ்டன் இந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் போலவே இருக்கும் என கூறுகிறார் லிவிங்ஸ்டன்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் போல மோசமான திரைப்படமாக இருந்தாலும் இது மக்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கிறேன் என கூறியுள்ளார் லிவிங்ஸ்டன்.
