ஆரம்பிக்கும் முன்னே பாக்ஸ் ஆபிஸ் அடித்த லோகேஷ், விஜய் காம்போ..!

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராக இருக்கும் திரைப்படம் இப்போதே பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தற்சமயம் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காகவே இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு பிரபலமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். அதற்கான வேலைகள் தற்சமயம் நடந்து வருகின்றன. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கிறார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளார். மேலும் அவர் இயக்கிய விக்ரம் திரைப்படமும் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதனால் லோகேஷ் கனகராஜ் மேல் பல தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது.

இந்நிலையில் படம் தயாராவதற்கு முன்பே படத்தின் ஓ.டி.டி உரிமம், சாட்டிலைட் உரிமம் என மொத்தம் 400 கோடி அளவில் விற்பனைக்கு பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

Refresh