Tamil Cinema News
வழக்கமான விஷயத்தை மாத்திட்டேன்.. 45 நாள் அவ்வளவு கஷ்டப்பட்டுட்டார்.. கூலி குறித்து கூறிய லோகேஷ் கனகராஜ்..
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி.
இந்த திரைப்படம் குறித்து நிறைய விஷயங்களை சமீபகாலமாக பகிர்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏனெனில் அடுத்த மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக நிறைய இடங்களில் பேட்டி கொடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
பேட்டிக்கு நடுவே நிறைய திரைப்படம் குறித்த விஷயங்களையும் கூறி வருகிறார். இந்த நிலையில் இத்தனை வயதில் கூட ரஜினிகாந்துக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தை பொறுத்தவரை படத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான காட்சிகள் மட்டுமே கிரீன் மேட் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டது. மற்ற காட்சிகள் அனைத்துமே வெளியில் பயணம் சென்று எடுக்கப்பட்ட காட்சிகள் தான்.
அதிலும் 45 நாட்கள் நடிகர் ரஜினிகாந்த் இரவு 2 மணி வரை தூங்காமல் நடித்துக் கொடுத்தார். நிறைய இரவு நேர காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் நிறைய விஷயங்களை மாற்றி இருக்கிறோம்.
வழக்கமாகவே லோகேஷ் கனகராஜ் என்றால் போதைப்பொருள் குடோன் மாதிரியான காட்சிகள் இருக்கும் என்று எல்லாரும் கூறி வருவதால் அந்த மாதிரியான காட்சிகள் எதுவுமே இல்லாமல் கூலி திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
