Connect with us

அந்த சீன் வைக்க மட்டும் லோகேஷ்க்கு விருப்பமே இல்ல… அதே மாதிரி சொதப்பிடுச்சு!..

Cinema History

அந்த சீன் வைக்க மட்டும் லோகேஷ்க்கு விருப்பமே இல்ல… அதே மாதிரி சொதப்பிடுச்சு!..

Social Media Bar

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இனி சின்ன ஹீரோவை வைத்து எடுத்தாலும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்றால் அந்த திரைப்படத்திற்கு கூட்டம் அலை மோதும் என்கிற அளவில் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இன்று வெளியான நிலையில் கிட்டத்தட்ட பல திரையரங்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு திரையரங்குகளே முழுமையாக ஹவுஸ்புல் ஆகி உள்ளன.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு காட்சியையும் தனக்கு விருப்பமான வகையில் எடுக்கக் கூடியவர் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவருக்கே ஒரு காட்சி பிடிக்காமல் எடுத்து அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் போய் உள்ளது.

மாஸ்டர் திரைப்படத்தை இயக்கும் பொழுது அதில் ஆண்ட்ரியா வில்லை பயன்படுத்தி சண்டையிடுவது போன்ற காட்சி ஒன்று வரும். அந்த காட்சியை முழுக்க முழுக்க பகலில் எடுத்து இரவில் எடுத்தது போல பிறகு மாற்றியுள்ளனர்.

அந்த காட்சியை எடுக்கும் பொழுதே இது ஒர்க் அவுட்டாகாது என்று லோகேஷ் கனகராஜிற்கு தோன்றியுள்ளது. இருந்தாலும் செலவு செய்தது வீணாகிவிடும் என்று படத்தில் அந்த காட்சியை வைத்துள்ளார் அதே போல படம் வெளியான பொழுது அந்த சண்டை காட்சிகள் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானது.

To Top