Tamil Cinema News
2000 கோடி பிசினஸ்க்கு காரணமானவங்க அவங்கதான்.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!
தமிழ் சினிமாவில் பல நடிகர்களை ஒரு திரைப்படத்தில் நடிக்க வைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. மணிரத்தினம் மாதிரியான பெரிய இயக்குனர்களுக்கு மட்டும் தான் அந்த மாதிரி விஷயங்கள் சாத்தியப்பட்டிருக்கின்றன.
அப்படி இருக்கும் பொழுது ஒரு இளம் இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மிக எளிமையாக அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார். மேலும் LCU என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இவரின் திரைப்படங்கள் எல்லாமே ஒன்றுடன் மற்ற திரைப்படங்கள் தொடர்புடையதாக இருக்கும். அது சாத்தியப்படுவதற்கு யார் காரணம் என்பது குறித்து சமூகத்தில் அவர் பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது பல நடிகர்களின் ஒத்துழைப்பும் பல தயாரிப்பாளர்களின் ஒத்துழைப்பும்தான் இதற்கு காரணம். அவர்கள் எல்லாம் இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்னால் எல்.சி.யு என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கி இருக்க முடியாது.
இப்பொழுது பல நடிகர்கள் சேர்ந்து நடித்து வருகிற படத்திற்கு 2000 கோடி பிசினஸ் இருக்கிறது என்றால் அது என்னால் கண்டிப்பாக கிடையாது. அதில் நடிக்கும் நடிகர்களாலும் இந்த தயாரிப்பாளர்களாலும் தான் என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
