Connect with us

பெரிய மிஷன் சக்ஸஸ்புல்லா முடி..ரசிகர்கள் கொண்டாட்டம்.. ரஜினி லோகேஷ் கூட்டணி.. புது அப்டேட்!..

News

பெரிய மிஷன் சக்ஸஸ்புல்லா முடி..ரசிகர்கள் கொண்டாட்டம்.. ரஜினி லோகேஷ் கூட்டணி.. புது அப்டேட்!..

Social Media Bar

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். பொதுவாக ஞானவேல் தனது திரைப்படத்தில் சமூகம் சார்ந்த பல விஷயங்களை பேசக்கூடியவர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கிறாராம். வழக்கமாக போலீஸ் வன்முறைகளையும் அத்துமீறல்களையும் தமிழ் இயக்குனர்கள் ஹீரோயிசமாக காட்டுவார்கள். ஆனால் அந்த வன்முறை பொதுமக்களை எவ்வளவு பாதிக்கிறது என காட்டுபவர் ஞானவேல்.

எனவே அந்த மாதிரியான காட்சிகள் ஞானவேல் படத்தில் இருக்காது என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ரஜினி லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் படம் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் எந்த அளவிற்கு மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். அதில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றால் சொல்லவே வேண்டாம். இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்கு வரிசை கட்டிக்கொண்டு பல தயாரிப்பு நிறுவனங்கள் நின்றன.

இறுதியாக தற்சமயம் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தையும் அனிரூத்தான் இசையமைக்கிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

To Top