Tamil Cinema News
எல்.சி.யு உருவாக முக்கிய காரணமே இந்த இயக்குனர்தான்.. உண்மையை கூறிய லோகேஷ்..!
லோகேஷ் கனகராஜ் எடுத்து வரும் எல்.சி.யூ திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழ் சினிமாவிலேயே இந்த ஒரு விஷயத்தை செய்தது லோகேஷ் கனகராஜ் தான் என்று கூறவேண்டும்.
அவர் எடுக்கும் எல்லா திரைப்படங்களிலும் மற்ற திரைப்படங்களுடன் ஒரு தொடர்பு இருப்பதை பார்க்க முடியும். இந்த யோசனை தனக்கு எப்படி வந்தது என்பது குறித்து லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும் பொழுது தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் இருப்பார்கள். அவர்களது பெரும்பான்மையான திறமையை வெளிக்காட்டி இருக்க மாட்டார்கள். ஆனால் அவற்றை உள்ளுக்குள்ளிருந்து பார்க்கும் பொழுது வியப்பாக இருக்கும்.
அப்படி நான் பார்த்து வியந்த ஒரு நபர்தான் தியாகராஜன் குமாரராஜா. தியாகராஜன் குமாரராஜா ஓரம்போ திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருந்தார்.
அந்த திரைப்படத்தில் வரும் ஆர்யாவின் ஆட்டோவை அவர் இயக்கிய படமான ஆரண்ய காண்டம் படத்தில் ஒரு காட்சியில் வைத்திருந்தார். அப்படி அவர் செய்த விஷயத்தை தான் நான் கொஞ்சம் பெரிதாக என்னுடைய திரைப்படத்தில் செய்தேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
எனவே லோகேஷ் கனகராஜ் இந்த எல் சி யு என்கிற விஷயத்தை செய்வதற்கு காரணமாக இருந்தவர் தியாகராஜன் குமாரராஜா என இதன் மூலம் தெரிகிறது.
