தம்மாதுண்டு ரோலுக்கு இவ்வளவு சீனா? ஆர்.ஜே பாலாஜியுடன் சேரும் லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் வரிசையாக டாப் ஹிட் படங்களாக கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஹிட் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது.

அதிலும் நான்காவதாக வந்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. எந்த ஒரு இயக்குனரும் நான்கே திரைப்படத்தில் இப்படியான உச்சத்தை பெற்றது கிடையாது. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு உச்சத்தை பெற்றுள்ளார் லோகேஷ்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திற்காக அவர் 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து லோகேஷ் திரைப்பட்ங்களில் நடிக்க உள்ளார் என்று பலவாறு செய்திகள் பரவி வந்தன.

ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் தயாராகி வரும் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் லோகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தன. எப்படியும் சிறப்பான ஒரு கதாபாத்திரத்தில் லோகேஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லோகேஷ் கனகராஜ் மிகவும் சின்ன கதாபாத்திரத்தில்தான் அந்த படத்தில் நடிக்கிறாராம். வெறும் ஒரு நிமிட காட்சிக்குதான் படத்தில் வருகிறார் என கூறப்படுகிறது. ஆர்.ஜே பாலாஜியும் லோகேஷ் கனகராஜும் பல வருடங்களாக நண்பர்களாக இருந்தவர்கள். எனவே நட்புக்காக லோகேஷ் இதை நடித்து கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.