Connect with us

லோகேஷ் படத்துல ரஜினிக்கு வில்லன் இவரா!.. என்னப்பா சொல்றீங்க!..

News

லோகேஷ் படத்துல ரஜினிக்கு வில்லன் இவரா!.. என்னப்பா சொல்றீங்க!..

Social Media Bar

Lokesh kanagaraj: லோகேஷ் கனகராஜ் தற்சமயம் தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக இருக்கிறார். முக்கியமாக அவர் கமர்ஷியலான சண்டை படங்களை சிறப்பாக இயக்குவதால் அவருக்கு சினிமாவில் பெரும் நடிகர்களிடம் இருந்தே வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆவலாக இருந்தது. ஏனெனில் ஆக்‌ஷன் ஹீரோவாக தமிழில் கலக்கியவர் ரஜினிகாந்த். இந்த நிலையில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.

ஜெய்பீம் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்பே முடியும் நிலையில் உள்ளது. ஆனால் இன்னமும் அந்த படத்திற்கு விளம்பரம் என்று பெரிதாக ஒன்றும் செய்யப்படாமல் இருக்கிறது.

lokesh-kanagaraj
lokesh-kanagaraj

இந்த நிலையில் அடுத்த மாதம் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க இருப்பதால் தற்சமயம் படத்திற்கான நடிகர்களை தேர்ந்தெடுத்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் முதலில் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் இருந்து வந்தன.

ஆனால் காமெடி கதாநாயகனாக நடித்து வரும் சிவகார்த்திகேயனை மக்கள் வில்லனாக ஏற்றுக்கொள்வது கடினம் என்பதால் தற்சமயம் நடிகர் ராகவா லாரன்ஸை படத்தில் வில்லனாக தேர்ந்தெடுத்துள்ளனராம். ராகவா லாரன்ஸிற்கு சினிமாவிற்கு வந்த நாள் முதலே ஒரு காட்சியிலாவது ரஜினியுடன் சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

இந்த நிலையில் வில்லனாக நடித்தாலும் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கிறோம் என்னும் சந்தோஷத்திலேயே அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக செய்திகள் பரவி வருகின்றன.

To Top