முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிட்டா அவ்வளவுதான்!.. ரசிகர்களுக்கு லோகேஷ் வைத்த கோரிக்கை!..
வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. பீஸ்ட் திரைப்படம் வந்த காலக்கட்டம் முதலே ரசிகர்களுக்கு இந்த படத்திற்குதான் வெறித்தனமாக காத்திருந்தனர். இந்த நிலையில் சீக்கிரத்தில் படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் படம் என்பதை விடவும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதாலேயே படத்திற்கு அதிகமான வரவேற்பு உண்டாகியுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும்போதும் லோகேஷ் கனகராஜ் அந்த படம் குறித்து மக்களிடம் கோரிக்கை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் விக்ரம் திரைப்படம் வெளியாக இருக்கும் இறுதி நேரத்தில் படத்தை பார்க்க போவதற்கு முன்பு ஒருமுறை கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்றுவிடுங்கள் என கூறியிருந்தார் லோகேஷ்,
அதே போல இந்த படத்திற்கும் கூட மக்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் லோகேஷ். அதாவது படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளை மிஸ் செய்து விடாதீர்கள். எப்படியாவது முதல் 10 நிமிடத்தை பார்த்துவிடுங்கள். ஏனெனில் அந்த காட்சிகளுக்காக 1000 ஊழியர்கள் சேர்ந்து ஒரு வருடம் உழைத்துள்ளோம் என கூறியுள்ளார்.
அதை வைத்து பார்க்கும்போது படத்தில் கழுதை புலி வரும் காட்சிகளுக்கான கிராபிக்ஸ் வேலைகள் ஒரு வருடம் நடந்ததாக கூறப்பட்டது. அந்த காட்சிதான் முதல் 10 நிமிடம் வர போகிறது என பேச்சுக்கள் உள்ளன.