தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றிகளை கொடுக்கின்றன.
எனவே அவரது படங்களுக்கு தயாரிப்பாளர்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது.இதுவரை லோகேஷ் கனகராஜ் நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த நான்குமே நல்ல ஹிட் கொடுத்துள்ளன. தற்சமயம் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஒரு பேட்டியில் அவரிடம் உங்களுக்கு பிடித்த மூன்று விஜய் திரைப்படங்களை கூறுங்கள் என கேட்ட பொழுது அவர் சில படங்களை கூறினார்.அதில் முதலாவது படம் கத்தி.
கத்தி திரைப்படத்தில் கிராமத்தைச் சேர்ந்த விஜய் கதாபாத்திரம் முக்கியமானது. அந்த கதாபாத்திரம் மிகவும் கோழையாகவும் அனைத்திற்கும் பயப்படும் கதாபாத்திரமாகவும் இருக்கும். ஒரு கமர்சியல் கதாநாயகனாக இருக்கும் விஜய் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது பெரிய விஷயமாகும்.
அதற்கு அடுத்து கில்லி திரைப்படம், ஊருக்குள் ஜாலியாக கபடி விளையாடி கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞன் திடீரென ஒரு பெண்ணுக்காக செய்யும் சாகசங்களாக அந்த திரைப்படம் இருக்கும்.
அதற்குப் பிறகு துப்பாக்கி திரைப்படம் துப்பாக்கி திரைப்படத்தில் தனது எதிரி யார் என்று தெரியாமலேயே அவனுக்கு எதிராக ஹீரோ செயல்படும் விதம் இவை எல்லாம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய தளபதியின் திரைப்படங்கள் என்று லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.






