Connect with us

கொஞ்ச நாள்ல மக்கள் என்னை வெறுத்துருவாங்க!.. உஷாராக இருக்கும் லோகேஷ் கனகராஜ்..

lokesh kanagaraj

Tamil Cinema News

கொஞ்ச நாள்ல மக்கள் என்னை வெறுத்துருவாங்க!.. உஷாராக இருக்கும் லோகேஷ் கனகராஜ்..

Social Media Bar

தமிழில் வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ். அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான கைதி திரைப்படமே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர், விக்ரம் என அனைத்து படங்களும் பெரும் ஹிட் கொடுத்தன.

தற்சமயம் இவர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்குகிறார். லியோ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களாகவே எடுத்துக் கொண்டிருக்கிறீர்களே வேறு வகையான திரைப்படங்கள் எடுப்பதற்கு ஆவல் இல்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் நான் தொடர்ந்து ஆக்ஷன் படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது அது மக்களுக்கு பிடிக்கிறது.

எனக்கும் ஆக்ஷன் திரைப்படங்கள் எடுப்பதில் ஒரு நிறைவு இருக்கிறது ஆனால் தொடர்ந்து மக்களுக்கு என் படங்கள் பிடிக்காது ஒரு அளவுக்கு மேல் என்னடா இது லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே இப்படித்தான் என்று கூறி விடுவார்கள். அந்த சமயத்திற்குள் நான் வேறு ஒரு வகையான சினிமாவை எடுக்க போக வேண்டும் என்று கூறியுள்ளார்.

அது ஒரு வகையில் உண்மைதான் ஏனெனில் இப்போது லியோ படத்தின் டிரைலர் வந்தபோதே மக்கள் பலரும் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அதிக வன்முறையான திரைப்படங்களை எடுக்கிறார் என்று கூறி வந்தனர் அதற்கு ஏற்றார் போலவே இந்த பதிலை கொடுத்துள்ளார் லோகேஷ்.

To Top