Tamil Cinema News
விஜய் பேசுற கெட்ட வார்த்தைக்கெல்லாம் நானே முழு பொறுப்பு! – சரணடைந்த லோகேஷ் கனகராஜ்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியது முதலே தொடர்ந்து பல்வேறு எதிர்பார்ப்புகளும், ட்ரெண்டிங்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற இருந்த லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறாமல் போனது ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
ஆனால் அந்த ஏமாற்றங்களுக்கு நிறைவை தரும் விதமாக சமீபத்தில் வெளியான லியோ பட ட்ரெய்லர் அமைந்துள்ளது. ரசிகர்கள் அனைவரும் லியோ பட ட்ரெயிலரை கொண்டாடி வரும் நிலையில் அதன் மீதான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
படத்தில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசுவதும், ரத்தக் களறியான சண்டை காட்சிகளும் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமூகப் பொறுப்புள்ள நடிகரான விஜய் கெட்ட வார்த்தை பேசலாமா? என்ற ரீதியிலான கேள்விகளும் எழுந்துள்ளன.
இது குறித்து சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் “இந்த படத்துல விஜய் அண்ணா அவர் விருப்பப்பட்டு எதையுமே சேர்க்கல. எல்லாமே நான் சொன்னதை மட்டும் தான் செஞ்சார். அந்த குறிப்பிட்ட கெட்ட வார்த்தை கூட பேசுறதுக்கு முன்னாடி ’இந்த வசனத்தை பேசியே ஆகணுமா?’ என என்கிட்ட கேட்டார். ’ஆமாண்ணா இது படத்துக்கு கண்டிப்பா தேவை’ அப்படின்னு நான் சொன்னதுனால தான் அந்த வசனத்தையும் பேசினார். அதனால் அந்த வசனம் தொடர்பாக வரும் எந்த விமர்சனங்களும், கண்டனங்களுக்கும் நானே முழு பொறுப்பு. இதில் விஜய் அண்ணாவுக்கு சம்பந்தம் இல்லை“என்று கூறியுள்ளார்.
மேலும் “லியோ படத்தில் பஞ்ச் வசனங்களை கிடையாது. அது போல ஹீரோ அறிமுக பாடல், அறிமுக சண்டைக்காட்சிகள் கிடையாது. இந்த படத்தில் விஜய்யின் வழக்கமான மேனரிசங்கள் கூட கிடையாது. முழுக்க ஒரு புதிய விஜய்யை நீங்கள் பார்க்கும் படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
