Tamil Cinema News
ரஜினி ரசிகனா இருந்த நான் கமல் ரசிகனா மாற இதுதான் காரணம்.. லோகேஷ் கனகராஜ்..!
தமிழில் இப்பொழுது பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இவரது படங்களில் சண்டை காட்சிகள் சிறப்பாக இருக்கும்.
மற்ற திரைப்படங்களை விடவும் சிம்பிளாக இருந்தாலும் கூட அவை மக்களுக்கு பிடித்த வகையில் அமைந்திருக்கின்றன. இதனாலையே லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனி வரவேற்பு இருக்கதான் செய்கிறது.
இந்த நிலையில் தற்சமயம் ரஜினியை கதாநாயகனாக வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்து வருகிறது. ஒரு கமல் ரசிகனாக இருந்த லோகேஷ் கனகராஜ் எப்படி ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.
ஆனால் ஆரம்பத்தில் இவர் ரஜினி ரசிகராகதான் இருந்திருக்கிறார். இந்த விஷயத்தை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது சின்ன வயதில் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் பாடலை கேட்டு தான் நான் சாப்பாடே சாப்பிடுவேன் என்று எனது தாய் கூறியுள்ளார்.
படையப்பா திரைப்படம் வரும் வரையிலுமே நான் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன் அதற்கு பிறகு எப்பொழுது சத்யா திரைப்படத்தை பார்த்தேனோ அதற்குப் பிறகுதான் நான் கமல்ஹாசனின் ரசிகனாக மாறினேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
