லியோ படத்தோட கனெக்ட் இருக்கா? கைதி 2 குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்.! 

தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு இயக்குனராக இருந்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாறுபட்ட திரைக்கதை காரணமாகவே லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆக்ஷன் திரைப்படங்கள் என்றாலும் செண்டிமெண்டாக அந்த படங்களில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் வைத்திருப்பார். கைதி திரைப்படத்தை இயக்கிய பொழுது லோகேஷ் கனகரஜ் இவ்வளவு பெரிய இயக்குனராக அடையாளம் காணவில்லை.

ஆனாலும் கூட அப்பொழுது கைதி படத்திற்கான இரண்டாம் பாகத்திற்கு கண்டினியூ வைத்து தான் இந்த படத்தை அவர் முடித்து இருந்தார். இந்த நிலையில் இப்பொழுது கைதி இரண்டாம் பாகம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

Social Media Bar

அதில் அவர் கூறும் பொழுது கைதி படத்தை முடிக்கும் பொழுது அந்த படத்தில் 10 வருடத்திற்கு முன்பு என்ன தவறு செய்ததால் கார்த்தி கைதி ஆனார் என்பதை விளக்கவில்லை.

எனவே அதைதான் அடுத்த பாகமாக எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். அதற்குப் பிறகு எல் சி யு என்கிற ஒரு விஷயம் உருவானது. நான் எடுக்கும் படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு கிடைத்ததால் கைதி 2வின் கதையை அதற்குப் பிறகு நான் மாற்றினேன்.

இந்த 10 வருடத்திற்கு முன்பு நடந்த கதை மட்டும் அல்லாமல் லியோ விக்ரம் போன்ற படங்களில் கனெக்ட் வைக்கும் விதத்தில் கைதி 2வின் கதைகளம் அமைய வேண்டும் என்று முடிவெடுத்தேன் என கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

எனவே படத்தின் முதல் பாதியானது கார்த்தியின் முன் கதையை கூறும் விதமாகவும் அடுத்த பாதியானது கைதி படத்திற்கு பிறகு நடக்கும் விஷயங்களை வைத்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.