Connect with us

கெட்ட வார்த்தை பேசும்போது விஜய் வேற மாதிரி மாறிடுவாரு!.. லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!.

News

கெட்ட வார்த்தை பேசும்போது விஜய் வேற மாதிரி மாறிடுவாரு!.. லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!.

Social Media Bar

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் சீக்கிரத்தில் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான டிரைலர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும் அதில் விஜய் பேசிய ஒரு வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியது.

லோகேஷ் கனகராஜ் தனது முதல் படத்தை எடுக்கும் பொழுது அதில் கெட்ட வார்த்தைகளுக்கு எதிரான ஒரு மனிதராக இருந்திருப்பார். சென்னையில் சகஜமாக கெட்ட வார்த்தை பேசுவதை எதிர்த்து பேசி இருப்பார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரே தனது திரைப்படங்களில் அதிக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த துவங்கி விட்டார்.

ஏற்கனவே மாஸ்டர், விக்ரம் மாதிரியான படங்களிலும் அதை செய்திருந்தார் அதில் ஒரு படி மேலே போய் இந்த படத்தில் மிகத் தெளிவாகவே கெட்ட வார்த்தையை பேச வைத்துள்ளார். இது ட்ரைலரிலும் வந்துள்ளது இதனால் இந்த விஷயம் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது.

அது குறித்து லோகேஷ் கனகராஜிடம் கேட்ட போது விஜய் அந்த வார்த்தையை பேசும் பொழுது அவருடைய ரியாக்ஷன் வேறு மாதிரி இருந்தது இதுவரை பார்க்காத விஜய்யை அப்போது பார்த்தேன். அதை மக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் முக்கியமாக அந்த காட்சியை ட்ரைலரில் வைத்தேன் என்று கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் திரைப்படமாக வரும்பொழுது அதில் படத்தில் அந்த வார்த்தைகள் இருக்காது என்றும் கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

To Top