அஜித்துக்கு நான் சொன்ன கதை.. லோகேஷ் போட்ட அடுத்த ப்ளான்.!

தமிழில் மிக முக்கியமான நடிகர்கள் பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஐந்து படங்களை இயக்குவதற்கு உள்ளாகவே இத்தனை பெரிய வரவேற்பு வேறு எந்த இயக்குனருக்கும் கிடைத்ததில்லை என்று கூறலாம்.

ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களில் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான பாணியை கடைபிடித்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால் இப்போது வரை அவர் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக இருக்கிறது.

இதனால் அவர் தமிழில் மிக முக்கிய நடிகர்களான விஜய் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்று பெரிய நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி விட்டார் ஆனால் அஜித்தை வைத்து மட்டும் அவர் இன்னும் ஒரு படம் கூட இயக்கவில்லை

Social Media Bar

இதுக்குறித்து லோகேஷ் ஒரு பேட்டியில் பேசும்போது அஜித்தை வைத்து படம் இயக்கக் கூடாது என்றெல்லாம் எனக்கு எதுவும் இல்லை. அவருக்கும் ஒரு கதை நான் எழுதினேன். பிறகு அஜித்திடம் கதை குறித்து பேசியுள்ளேன்.

ஆனால் நாங்கள் சேர்ந்து படம் பண்ண வேண்டும் என்று அப்போது எதுவும் முடிவு எடுக்கவில்லை. பிறகு நானும் நிறைய படங்களில் கமிட் ஆகி விட்டதால் பிஸியாகிவிட்டேன். அவரும் கார் ரேஸ் மாதிரியான விஷயங்களுக்கு சென்றதால் பிஸியாகிவிட்டார்.

ஒருவேளை இதெல்லாம் முடிந்து மீண்டும் நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்று கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.