Connect with us

அவனுக்கு ஏத்த மாதிரி கைதி 2 ல மாத்த வேண்டி இருக்கு.. ஆர்.ஜே பாலாஜி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!

karthi rj balaji

Tamil Cinema News

அவனுக்கு ஏத்த மாதிரி கைதி 2 ல மாத்த வேண்டி இருக்கு.. ஆர்.ஜே பாலாஜி குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ்.!

Social Media Bar

ஆர்.ஜே பாலாஜி இயக்குனர் லோகேஷ் கனகராஜும் ஆரம்பத்திலிருந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆர்.ஜே பாலாஜி, லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தை இயக்கிய காலகட்டத்தில் இருந்து அவருக்கும் ஆர்.ஜே பாலாஜிக்கும் இடையே பழக்கம் இருந்து வருகிறது.

அந்த நட்பு இப்பொழுதும் நீண்டு கொண்டு வருகிறது. தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜிக்கு சப்போர்ட் செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் கூட லோகேஷ் கனகராஜ் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருப்பதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி நடித்து வெளியாகவிருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் விழாவிற்கு வருகை தந்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அங்கு பேசிய லோகேஷ் கனகராஜ் எனக்கு ஆர்.ஜே பாலாஜியை எனக்கு வெகு நாட்களாகவே தெரியும்.

sorga vaasal

sorga vaasal

ஆர்.ஜே பாலாஜி குறித்து லோகேஷ் கனகராஜ்:

ஆர்.ஜே பாலாஜி ஒரு திறமையான ஆள் அதனால்தான் அவர் சினிமாவிற்கு வரும்பொழுது நான் அவரை பாராட்டி பதிவு ஒன்று வெளியிட்டேன் என்று கூறி வந்தார். அப்பொழுது அங்கு நின்ற பத்திரிகையாளர் நீங்கள் கைதி 2 திரைப்படத்தை இயக்குகிறீர்கள்.

சொர்க்கவாசல் திரைப்படத்திலும் ஆர்.ஜே பாலாஜி கைதியாக தான் வருகிறார். இதற்கும் உங்கள் படத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் என்ன செய்து வெட்டி வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை

அதில் எனது ஐடியாவில் இருந்து ஏதாவது அவன் செய்திருந்தான் என்றால் எனது படத்தில் நான் சில விஷயங்களை மாற்ற வேண்டி இருக்கும் என்று கூறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

To Top