Tamil Cinema News
புஷ்பா சம்பவத்தை அப்போவே செய்த மீனா.. ஐட்டம் பாடலுக்காக வாங்கிய சம்பளம்.!
சினிமாவில் ஒரு காலகட்டங்களில் அதிகம் வரவேற்பு பெற்ற நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை மீனா. ஆரம்பத்தில் இருந்தே நடிகை மீனாவிற்கு ஒரு தனிப்பட்ட ரசிக்கப்பட்டாளம் இருந்தது.
அதற்கு முக்கிய காரணம் மீனாவின் தனிப்பட்ட நடிப்புதான். 16 வயதிலேயே சினிமாவிற்கு வந்த மீனா தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதனால்தான் அப்பொழுது அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தன முக்கியமாக பெரிய நடிகர்களுடன் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று நடித்து வந்தார் மீனா. இருந்தாலும் கூட நடிகை மீனா நடிகர் விஜய்க்கு ஜோடியாக மட்டும் பெரிதாக நடித்ததே கிடையாது.
நடிகை மீனா:
அதற்கான வாய்ப்புகள் அப்பொழுது அமையவில்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக மீனா நடித்திருக்கிறார் இந்த நிலையில் விஜயுடன் நடனம் ஆடுவதற்காக ஒரு பாடலுக்காக மீனா அதிக தொகை பெற்றது குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.
வெகு நாட்களாக விஜய் படத்தில் வாய்ப்பு கிடைக்காததால் மீனாவே விஜய் படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து வைத்திருந்தாராம். ஆனால் ஆர்.பி சௌத்ரி ஷாஜகான் திரைப்படத்தை தயாரித்த பொழுது அதில் ஒரு பாடலில் மீனாதான் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
இது குறித்து மீனாவிடம் கேட்ட பொழுது அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். பிறகு ஒரு படத்திற்கான சம்பளத்தை அந்த ஒரு பாடலுக்கு தருவதாக ஆர்.பி சௌத்ரி கூறியிருக்கிறார். பிறகுதான் மீனா அந்த பாடலில் ஆடுவதற்கு ஒப்பு கொண்டுள்ளார். சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் என்கிற ஒரு பாடல் அந்த படத்தில் வரும்.
அதற்கு ஆடுவதற்காகதான் அவ்வளவு பெரிய தொகையை வாங்கி இருக்கிறார் நடிகை மீனா. அதை போலவே புஷ்பா படத்தில் ஊ சொல்ரியா மாமா பாடலில் ஆடுவதற்கு சமந்தா 3 கோடி ரூபாய் வாங்கியதாக ஒரு பேச்சு உண்டு.