News
கைதி 2வுக்கும் தலைவர் 171க்கும் லிங்க் இருக்கு!.. அப்ப இதுவும் விக்ரமோட கனெக்ட் ஆகுதா! கண்டுப்பிடித்த ரசிகர்கள்!.
Rajinikanth Thalaivar 171 : லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படம் இயக்குகிறார் என்றாலே அந்த படம் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸில் வருகிறதா என்பதுதான் இப்போதெல்லாம் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்னும் விஷயம் வெளிநாட்டு சினிமாக்களில் மட்டுமே இருந்து வந்த நிலையில் அதை தமிழ் சினிமாவில் சாத்தியமாக்கினார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் படத்தின் அடுத்த பாகம்தான் லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸிற்கு கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே விக்ரமிற்கு முன்பு அதற்கு தொடர்பு கதையாக ரோலக்ஸ், கைதி 2 போன்ற படங்களை இயக்கவிருக்கிறார் லோகேஷ்.
லியோ திரைப்படமே எல்.சி.யு.வில் வருகிறதா என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. இந்த நிலையில் லியோ வெளியான பிறகு நடிகர் விஜய்யும் விக்ரம் திரைப்படத்தில் வருகிறார் என்பது கன்ஃபார்ம் ஆனது. இதற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் லோகேஷ்.

ஒருவேளை அந்த படமும் எல்.சி.யுவில் வருகிறதா. அப்படி வந்து விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் இருவரும் சேர்ந்து வந்தால் அது மாஸாக இருக்கும் என்பது ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது. இந்நிலையில் தலைவர் 171 படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்து சில தகவல்கள் இணையத்தில் வலம் வந்துக்கொண்டுள்ளன.
அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், மம்முட்டி, ராகவா லாரன்ஸ் மூவரும் இந்த படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ராகவா லாரன்ஸும் சிவகார்த்திகேயனும் ரஜினிகாந்தின் பெரும் ரசிகர்கள் ஆவார்கள். அவர்களுக்கு வெகுநாட்களாகவே ரஜினிகாந்துடன் நடிக்க ஆசை. எனவே அந்த ஆசையை லோகேஷ் நிறைவேற்றியுள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கைதி 2 திரைப்படத்திலும் லாரன்ஸ்தான் வில்லன் என கூறப்படுகிறது. அதே லாரன்ஸ் தலைவர் 171 இல் இருப்பதால் கண்டிப்பாக இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
