News
வெற்றி மாறனுக்கு கிடைச்ச அந்த விஷயம் எனக்கு கிடைக்கல!. பயங்கரமா மிஸ் பண்றேன்.. ஓப்பனாக கூறிய லோகேஷ் கனகராஜ்…
தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே ஒரு நபர் நேரடியாக சினிமாவிற்கு வந்து இயக்குனர் ஆகி விடவே முடியாது என்கிற நிலை இருந்தது. யாரேனும் ஒரு இயக்குனரிடம் ஏற்கனவே உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த பிறகே ஒருவர் இயக்குனராக முடியும்.
ஆனால் இப்போதைய நிலை அப்படி இல்லை இப்போது ஒருவர் தன் திறமையை தயாரிப்பாளரிடம் காட்டிவிட்டாலே போதும் நேரடியாக இயக்குனராகி விட முடியும். கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்கள் எல்லாம் அப்படி சினிமாவிற்கு வந்தவர்கள்தான்.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் ஒரு முறை பேட்டியில் கூறும் பொழுது நாம் செய்வது சரியா தவறா என்பதை அறிய நாம் உதவி இயக்குனராக இருந்திருக்க வேண்டும். வெற்றிமாறனை பொறுத்தவரை அவர் படத்தில் ஏதாவது ஒரு தொய்வு கண்டாலோ சினிமா வாழ்க்கையில் ஒரு தோல்வியை கண்டாலோ அவரது குரு மகேந்திராவை போய் சந்தித்து வருவார்.
ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு அப்படி சப்போர்ட்டிருக்கு ஒரு ஆள் கிடையாது. எனவே உதவி இயக்குனராக இல்லாமல் நேரடியாக சினிமாவிற்கு வந்தது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. அந்த உதவி இயக்குனராக இருக்கும் வாழ்க்கையை நான் மிஸ் பண்றேன் என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் லோகேஷ் கனகராஜ்.
