Connect with us

கமல் பட டயலாக்கை கூட காப்பி அடிக்கும் லோக்கி!.. லியோவில் செய்த வேலை!..

leo kamalhaasan

News

கமல் பட டயலாக்கை கூட காப்பி அடிக்கும் லோக்கி!.. லியோவில் செய்த வேலை!..

Social Media Bar

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் மிகவும் உயர்ந்து விட்டது என கூறலாம். விக்ரம் திரைப்படத்தில் வாங்குவதைவிட இரண்டு மடங்கு அதிக சம்பளம் தற்சமயம் வாங்க துவங்கியுள்ளார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த படம் விக்ரம். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ஒரு கமல் ரசிகன் என்பதாலேயே கமலுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அந்த திரைப்படத்தை எடுத்திருந்தார்.

வெகு காலங்களுக்குப் பிறகு கமல் திரும்ப தமிழ் சினிமாவில் நடிப்பதால் அந்த திரைப்படத்திற்கு இன்னும் வரவேற்பு அதிகமாக இருந்தது. இது மட்டுமல்ல. லோகேஷ் கனகராஜ் இயக்கும் பல திரைப்படங்களில் கமல்ஹாசன் திரைப்படம் தொடர்பான காட்சிகளையோ அல்லது வசனங்களையோ அவர் வைப்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்திலும் இப்படியான ஒரு விஷயத்தை செய்துள்ளார். லியோ திரைப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யை பார்க்க அவரது நண்பர் வருவது போன்ற காட்சி ஒன்று இருக்கும். அதில் அவரை பார்த்து கோபமடையும் விஜய் ஓங்கி ஒரு அறை விட்டேன் என்றால் சைடுல பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கும் என்று கூறுவார்.

அந்த வசனம் ஏற்கனவே ஒரு கமல் திரைப்படத்தில் வந்த வசனம் ஆகும் கமலின் மிகப்பெரும் ரசிகன் என்பதாலேயே லோகேஷ் கனகராஜ் இந்த வசனத்தை விஜய்க்கு வைத்துள்ளார். இந்த நிலையில் தற்சமயம் இது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

To Top