Connect with us

மொத்தமா இழுத்து மூட போறாங்களா!.. இல்ல கை கொடுக்க போறாங்களா.. பிரபலங்களின் பிள்ளைகள் கையில் சிக்கிய லைகா!.

tamil celebrities

News

மொத்தமா இழுத்து மூட போறாங்களா!.. இல்ல கை கொடுக்க போறாங்களா.. பிரபலங்களின் பிள்ளைகள் கையில் சிக்கிய லைகா!.

Social Media Bar

Lyca: சினிமாவில் எப்பொழுதும் புதுமுக நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் என பலரும் அறிமுகமாகி கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் ஒரு சினிமாவில் நுழைவதற்கு எவ்வளவு கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் கூறிதான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் இது சிலருக்கு விதிவிலக்கு தான். காரணம் ஒரு சில நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் சினிமா பின்புலத்தை கொண்டு சினிமாவில் சுலபமாக நுழைந்து விடுவார்கள். சினிமா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சினிமாவில் சாதிப்பது என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் ரசிகர்கள் அவர்களை கொண்டாடுவதற்கு அவர்களின் திறமை மட்டும் தான் காரணமாக இருக்கும்.

அந்த வகையில் தற்பொழுது ஒரு பிரபலத்தின் மகன் ஒருவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்பொழுது அந்த தயாரிப்பு நிறுவனம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட நிலையில் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்ளுமா? என சமூக வலைத்தளங்களில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனராக களம் இறங்கும் பிரபலத்தின் மகன்

தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவருக்கு கடைசி திரைப்படம் என பலரும் கூறி வந்த நிலையில், மேலும் ஒரு படத்தில் அவர் நடிப்பார் எனவும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு அவர் அரசியலில் முழு நேரமாக தன்னுடைய வாழ்க்கையை தொடர இருக்கிறார்.

sanjay

இந்நிலையில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறியது அவரின் ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தற்பொழுது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

லைகா தயாரிப்பில் இவர் இயக்கப் போகும் படத்தை குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் அதன் பிறகு ஒரு அப்டேட்டும் வரவில்லை. தற்பொழுது படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்தின் நிலையைப் பற்றி பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

சிக்கலில் சிக்கிக்கொண்ட லைகா நிறுவனம்

சமீபத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் வெளிவந்த லால் சலாம் மற்றும் இந்தியன் 2 இரண்டுமே தோல்வி அடைந்தது. இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் படம் வேட்டையன் மற்றும் விடாமுயற்சி. தற்பொழுது இந்த இரு படங்கள் மட்டும் தான் லைகா நிறுவனத்திற்கு நம்பிக்கையாக இருக்கிறது

இந்நிலையில் விஜயின் மகன் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் திரைப்படத்தில் பிரபல நடிகர் சீயான் விக்ரமனின் மகன் துரு விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்றும், கதாநாயகியாக பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நடிப்பார் எனவும், மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமானின் மகன் அமீன் இசையமைப்பாளராகவும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பார் எனவும் தகவல் வெளிவந்தது.

vijay son

இந்நிலையில் பிரபலங்களின் வாரிசுகள் இந்த படத்தில் ஒன்றாக இணைய உள்ளதால், தமிழ் சினிமாவில் இந்த திரைப்படத்தை குறித்த எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது. அதே சமயம் லைகா இந்த படத்தை தயாரிப்பதால் இரண்டு தோல்வி படங்களுக்குப் பிறகு இந்த படம் எவ்வாறு அமையப்போகிறது. மேலும் தோல்வி அடைந்தால் லைகா நிறுவனத்திற்கு இது பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என தகவல் வெளியாகி வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top