Connect with us

மார்கன் படத்தின் வசூல் நிலவரம்.. இரண்டு நாட்களில் இவ்வளவுதானா?

Box Office

மார்கன் படத்தின் வசூல் நிலவரம்.. இரண்டு நாட்களில் இவ்வளவுதானா?

Social Media Bar

நடிகர் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆனாலும் கூட சமீப காலங்களாக அவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்காமல்தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மார்கன். இந்த திரைப்படம் ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். காவல் அதிகாரியாக இருக்கும் விஜய் ஆண்டனி வில்லனை கண்டறிவதை கதையாக கொண்டு படம் செல்கிறது.

அறிமுக இயக்குனர் லியோ ஜான்பால் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ப்ரிகிடா, சமுத்திரக்கனி, தீப்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இரண்டு நாட்களில் உலக அளவில் இந்த படம் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த படமே குறைந்த பட்ஜெட் படம் என்பதால் இது ஒரு நல்ல வசூலாகதான் பார்க்கப்படுகிறது.

To Top