இரண்டாம் திருமணம் குறித்து மாதம்பட்டி கொடுத்த அப்டேட்.. இதுதான் விஷயமா?

தமிழ்நாட்டில் தொடர்ந்து பிரபலங்களுக்கு சமைக்கும் சமையல்க்காரராக மிக பிரபலமானவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஆரம்பத்தில் சினிமாவின் மீது அதிக ஆர்வம் இருந்தது. அதனை தொடர்ந்து அவர் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் பெரிதாக சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார். இந்த நிலையில்தான் இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 5 இல் போட்டியாளராக கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்தான் மக்கள் மத்தியில் இவர் அதிக பிரபலமடைந்தார்.

madhampatti-rangaraj
madhampatti-rangaraj
Social Media Bar

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் சினிமாவில் டிசைனராக இருந்து வரும் ஜாய் பிரிகிடா என்பவரை காதலித்து வருவதாக ஒரு செய்தி உலாவி வந்தது. அதே போல இவர்கள் இருவருமே கூட அடிக்கடி சேர்ந்து புகைப்படங்களை வெளியிடுவது வெளியில் செல்வது என இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த வதந்தி குறித்து பதிலளித்த மாதம்பட்டி ரங்கராஜ் என் வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் என்பவை எனது தனிப்பட்ட விஷயங்கள். அதுக்குறித்து என்னால் எந்த ஒரு தகவலும் கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.

இது ரசிகர்களுக்கு இன்னும் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.