திருமணமான பெண்ணுடன் உறவு.. மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து வந்த புது தகவல்.!
போன வருடம் வெளியான குக் வித் கோமாளியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்பில் முன்பொரு காலத்தில் வெளியான திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றப்போதும் கூட ஏனோ மாதம்பட்டி ரங்கராஜ் திரும்ப பெரிதாக படங்களில் நடிக்கவே இல்லை.
அதற்கு பிறகு அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வந்தது. தொடர்ந்து பிரபலங்கள் வீட்டு விஷேசங்களில் சமைத்து கொடுக்கும் பிரபலமானவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார்.
அவை மட்டுமின்றி பெரிய திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களில் கூட இவர்தான் பிரபலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் திரைத்துறையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
சினிமா துறையில் ஃபேஷன் டிசைனராக இருந்து வருபவர் ஜாய் க்ரிஸில்லா. இவரும் மாதம்பட்டி ரங்கராஜும் நட்பில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தை மாதம்பட்டியுடன் கொண்டாடியதாக ஜாய் க்ரிஸில்லா தெரிவித்திருந்தார்.
மேலும் அவரது மொபைல் போன் வால்பேப்பரில் கூட அவர் மாதம்பட்டியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைதான் வைத்துள்ளார் கிறிஸில்லா. எனவே இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருந்து வருகிறது என பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இதுக்குறித்து அவரது மனைவி கூறும்போது மாதம்பட்டியின் பெயரை கெடுக்கும் வகையில் விளம்பரத்துக்காக அந்த பெண் இப்படி செய்து கொண்டுள்ளார்.